Home

ஸ்ரீ ராம ஜெயம்

தெய்வச் செயல்புரம், தூத்துக்குடி மாவட்டம், திருநெல்வேலி - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள 77 அடி விஸ்வரூப ஆஞ்சநேயர் மிகவும் பிரசித்திபெற்ற தோற்றத்தில் காட்சி அளிக்கிறார் (விஸ்வரூப தரிசனம்).

ஆறு ஸ்தலங்களாக கூறப்படுகின்ற,

  1. சுசீந்திரம் (கன்னியாகுமரி)
  2. நாமக்கல் (சேலம்)
  3. நங்கநல்லூர் (சென்னை)
  4. சின்னாளபட்டி (திண்டுக்கல்)
  5. தெய்வச்செயல்புரம் (தூத்துக்குடி)
  6. நுவரேலியா ராம்ரோடா (ஸ்ரீலங்கா)

ஸ்தலங்கிளில், இங்கு அருள் பாலிக்கும் விஸ்வரூப ஆஞ்சநேயர், மற்ற ஐந்து ஸ்தலத்திற்கு இல்லாத தெய்வாம்சமான அமைப்பு சிறப்புடன் அருள் பாலிக்கிறார்.  இந்த ஸ்தலத்தை சுற்றி சஞ்சீவி மலை, சிறுமலை சூழ இக்கோவில் அமைப்பு மிகவும் விசேஷமானது. இங்கு ஆதிகாலத்தில் சித்தர்கள் வாழ்ந்து உள்ளனர். அனுமன் சஞ்சீவி மலையை தூக்கி சென்ற போது அதிலிருந்து விழுந்த சிறு பகுதி தான் சிறுமலையாகும்.  ருத்ராம்சம் என்று சொல்லக்கூடிய தேசம் ஒளிவட்டம் போல் விசேஷமாக அமைந்துள்ளது.

பக்தர்களை அருள்கூர்ந்து கடாக்ஷிக்ககூடிய ஷேத்திரம் ஸ்ரீ விஸ்வரூப ஆஞ்சநேயர் சாலகிராம திருமேனியுடன் அருள் பாலிக்கும் அழகு வேறு எங்கும் இல்லாத சிறப்பம்சமாகும். கம்பீரமான திருமேனி, திருமுகம் திருக்கை, திருவடி எங்கு சென்றாலும் பார்க்க கிடைக்காத அனுகிரஹமாகும்.  பக்தர்களுக்கு எட்டு விதமான ஐஸ்வரியங்களையும் காரிய சித்தியையும் அனுக்கிரஹக்கிறார்.