ஸ்தல வரலாறு

தெய்வசெயல்புரம் ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி அம்பாள் சப்தரிஷி மகாபீடம்

ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி அம்பாள் திருக்கோவில் 1983 ஸ்ரீ வாலையானந்த ப.இ.முத்துசாமி அடிகளார் அவர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

இப்பூமியில் சப்தரிஷிகளும் வீற்றிருந்து உலக ஷேமத்திற்காக அம்பாளை பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார்கள். அப்போது அருகிலிருந்து மலையில் அன்னையானவள் ஆயிரம் சூரியன் வடிவில் காட்சியளித்து இருக்கிறாள் என்பது ஐதிகம்.

இப்பிறவியில் ஒவ்வொருவருக்கும் தங்களுடைய பிரச்சனைகளையும், தீய சக்திகளையும் அகற்றவும், குடும்பம் செழிக்கவும், வியாபாரம் தொழில் ஓங்கி வளரவும், பிணிகள் நீங்கவும், பெண்களுக்கு திருமணம் ஆகவும், குடும்ப விருத்திக்கும் மற்றும் ஒவ்வொருவருடைய வேண்டுதலையும் பூர்த்தி செய்வதற்க்கும் ஸ்ரீ வாலையானந்த ப.இ.முத்துசாமி அடிகளார் அவர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

ஸ்ரீ விஸ்வரூப சுந்தரவரத ஆஞ்சநேயர் பெருமானை கடந்த 2000 ஆண்டுகளுக்கு முன் பிரதிஷ்டை செய்துள்ளார்.

ஸ்ரீ வாலையானந்த ப.இ.முத்துசாமியே நமக!

இராமயண காலத்தில் சீதா லட்சுமியை சந்திக்க கடலை கடந்து போகும் முன் இப்பூமியில் விஸ்வரூபம் எடுத்துள்ளதாக முன்னோர்கள் வாக்கு. அதன்படியே இங்கு எழுந்தருளியுள்ளார்.